Categories
அரசியல்

கே.பி அன்பழகன் வீட்டில் ரெய்டு….! சிக்கிய பணம், நகை மதிப்பு எவ்வளவு தெரியுமா….?

முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் கணக்கில் வராத 2.65 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் கடந்த ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது அரசின் பணத்தை ஊழல் செய்து, தனது பெயரிலும் பினாமி மற்றும் குடும்பத்தினரின் பெயரிலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் சொத்துகள் வாங்கி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலனூரை சேர்ந்த அதிமுக பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி மனு கொடுத்திருந்தார்.

இந்த மனுவின் பெயரில் விசாரணையை தொடங்கிய லஞ்ச ஒழிப்பு துறையினர் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 27இல் இருந்து, 2021 ஆம் ஆண்டு மார்ச், 15ஆம் தேதி வரை கே.பி அன்பழகன் தன் பெயரிலும் தன் குடும்பத்தின் பெயரிலும், பினாமி பெயர்களிலும் 11 கோடியே, 32 லட்சத்து, 95 ஆயிரத்து, 755 ரூபாய் சொத்து சேர்த்ததாக அவரது மனைவி மல்லிகா, மகன் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்னவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து முக்கியமான ஆவணங்கள் இருப்பதாக தர்மபுரி மாவட்டத்தில் 53 இடங்களிலும் சேலத்தில் ஒரு இடத்திலும் சென்னையில் மூன்று இடத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த தீவிர சோதனையில் 2 கோடியே 87 லட்சத்து, 98 ஆயிரத்து 650 ரூபாய் பணம் மற்றும் 6.637 கிலோ தங்க ஆபரணங்கள் சுமார் 13.85 கிலோ வெள்ளி மற்றும் சில ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து, 650 ரூபாய் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Categories

Tech |