கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குடும்பத்தில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது யார் ? என்ற விவரம் குறித்து அலுவலகம் தகவல் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கொரோனாவால் போரிஸ் ஜான்சனின் மகள் ரோமி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போரிஸ்-கேரி ஜான்சன் தம்பதியினரின் 6 வார மகளான ரோமி கொரோனா பெருந்தோற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது தொற்றிலிருந்து அவர் விடுபட்டு விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.