கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த முன்னாள் போப் ஆண்டவர் முனி பேராயராக இருந்தபோது கையாண்ட 4 பாலியல் தொடர்புடைய வழக்கில் குற்றம் புரிந்ததாக குழு ஒன்று விசாரணையின் மூலம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான முன்னாள் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் இருந்துள்ளார்.
இதனையடுத்து ஜெர்மனியின் முனிச் உயர்மறைமாவட்டத்தின் குழு ஒன்று கடந்த 1945 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தேவாலயங்களில் பாதிரியார்கள் செய்த பாலியல் ரீதியான அத்துமீறல்கள் குறித்து ஆய்வு செய்துள்ளது.
அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் அந்த குழு அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 16 ஆம் பெனடிக்ட் முனிச் பேராயராக இருந்த காலகட்டத்தில் பாலியல் ரீதியான வழக்கிற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பாதிரியார்களை அவர் திருச்சபையின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் தேவாலய பணிகளில் ஈடுபடுத்தியதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
அதேபோல் மற்றொரு பாலியல் ரீதியான வழக்கை கையாண்டதிலும் அவர் தவறிழைத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.