புஷ்பா படத்தில் நடித்த நடிகை ஜோதி ரெட்டி ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் மற்றும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் துணை நடிகையாக நடித்த ஜோதி ரெட்டி ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்துள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதே நிரம்பிய ஜோதி ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை வேளையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தூக்கக்கலக்கத்தில் தான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதாக நினைத்து ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து பலத்த காயமடைந்த ஜோதி ரெட்டியை சக பயணிகள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் . கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.