முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “ஊடகங்களும், மக்களும் தாங்கள் வழங்கிய பொங்கல் பரிசில் கலப்படம் இருப்பதாக அம்பலப்படுத்தி போராடுகிறார்கள். அதிலிருந்து தப்பிப்பதற்காக தாங்கள் மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி கொள்கிறீர்கள். ஆனால் அந்த முயற்சி ஒரு போதும் பலனளிக்காது.
அதேபோல் பள்ளி பாடப்புத்தகங்களில் எடிட்டிங் செய்யப்பட்ட வரலாறுகளை தவிர்த்து உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு படிக்க தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று எழுதியுள்ளார். இதையடுத்து இறுதியாக வாய் தவறி ஜனவரி 26-ஆம் தேதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைப் பேச்சின் போது சுதந்திர தினம் என்று கூறிவிட்டார். அதனை சுட்டிக்காட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஐயா! இறுதியாக ஒரு நினைவூட்டல், ஜனவரி 26 நமக்கு சுதந்திர தினம் அல்ல குடியரசு தினம்” என்று கிண்டல் செய்துள்ளார்.