Categories
மாநில செய்திகள்

“மர்ம காய்ச்சல்”: தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள்…. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி….!!!!

தென்காசியில் ஆயிரக்கணக்கானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரிசோதனையை அதிகரிக்க மாவட்ட சிஐடியு செயலாளர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில், தென்காசியில் திடீரென ஆயிரக்கணக்கான மக்களுக்கு மர்ம காய்ச்சல், தலைவலி, சளி, கை கால் வலி, அதிகமான சோர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோணா பரிசோதனை மையம் செயல்படவில்லை. பல நேரங்களில் கொரோனா பரிசோதனை மையத்தில் ஆளில்லாமல் உள்ளது.

கொரோனா பரிசோதனை எடுக்கப்படாமல் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது. தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் குழுவினர் பரிசோதனை எடுப்பதற்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சுற்று வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |