I S L கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்சை வீழ்த்தி சொந்த மண்ணில் சென்னை அணி தன்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
அதனை தொடர்ந்தே 26-வது நிமிடத்தில் சென்னை அணியின் கோல் ஸ்கோரர் வல்ஸ்கிஸ் அடித்த கோல் மிக சர்ச்சையாக வெடித்தது. அந்த சமயத்தில் சென்னை வீரர் ‘பவுல்’ செய்ததாக கேரளா அணியினர் அது குறித்து நடுவருடன் பேசிக் கொண்டிருந்தனர். அந்த சில வினாடி குழப்பத்திற்கு இடையே பந்தை வேகமாக கடத்திச் சென்ற சென்னை வீரர் வல்ஸ்கிஸ் அதனை கோலாக்கி விட்டார். ‘பவுல்’செய்த நேரத்தில் நடுவரால் ஒரு முடிவுக்கு வராத நிலையில் கோல் அடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேரள வீரர்கள் நடுவரிடம் இடைவிடாமல் வாக்குவாதம் செய்தனர்.
களத்தில் ஆக்ரோஷமாக இருந்ததை பார்த்து நடுவர் பயந்து போய்ட்டாரோ? என்னவோ தெரியவில்லை, அதனால் சில நிமிடங்களுக்கு பிறகு அது கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகிய சென்னை வீரர்கள் நடுவரை கோபத்தில் முற்றுகையிட்டனர். சென்னை அணியின் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் OF -SIDE நடுவரிடம் முறையிட்டனர். ஆனால் அதனை நடுவர் ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை. ஆட்டம் தொடர்ந்து நடந்தன .
இந்த விவாதம் முடிந்த உடனே சென்னை வீரர் வல்ஸ்கிஸ் தட்டிக்கொடுத்த பந்தை சென்னையின் அணியின் வேகமான வீரர் சேங்தே 30-வது நிமிடத்தில் லாவகமாக கோல் அடித்து சுடச்சுட வீரர்களோடு சேர்த்து நடுவர்க்கும் பதிலடி கொடுத்தார். உள்ளூர் ரசிகர்களின் வெறித்தனமான உற்சாகத்தில் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து 40-வது நிமிடத்தில் சென்னை அணியின் முதல் கோல் ஸ்கோரர் வீரரான வல்ஸ்கிஸ் மேலும் ஒரு கோல் அடித்து, கேரளாவை நிலைகுலையச் செய்தார். இதனால் முதல்பாதியில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றது.
பிற்பாதியிலும் 2 அணியினரும் கோல் போடுவதில் தீவிரம் காட்டினர். 52-வது நிமிடத்தில் சென்னை வீரர் சேங்தே மேலும் ஒரு கோல் அடித்திருக்கும் வாய்ப்பை தவறவிட்டார் . தனி வீரராக எதிரணியின் கோல் எல்லையை நெருங்கிய அவர், கேரளா வீரர்கள் சூழ்ந்திருந்ததை பார்த்து உடனே ஓங்கி உதைத்தார். ஆனால் அது மயிரிழையில் கம்பத்திற்கு வெளியே சென்றதால் பயிற்சியாளருக்கும்,ரசிகர்களுக்கும் ஏமாற்றமளித்தது. பந்தை அதிகமான நேரம் வசத்தில் வைத்தது கேரளா (63 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தாலும் சென்னை தடுப்பு அணையை அவர்களால் உடைக்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் சென்னை வீரர் எலி சபியா 2-வது முறையாக பவுல் செய்ததால் மஞ்சள் அட்டை 2 முறை பெற்றதால், அவருக்கு சிவப்பு அட்டையை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அடுத்த ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாது தான் ரசிகர்களுக்கு சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.
ஆனால் முடிவில் சென்னையின் F C அணி தான் 3-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது.9-வது இடத்தில் இருந்து, 8-வது இடத்திற்கு ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். கேரளா அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.இன்று இரவு ஹைதராபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எப்.சி மற்றும் அட்லெடிகோ கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன.