Categories
மாநில செய்திகள்

இனி பள்ளிகளுக்கு அரசு நிதி வழங்க…. அரசு போட்ட அதிரடி கட்டுப்பாடு….!!!!

தமிழகத்தில் பள்ளிகளுடைய ஆவணங்களையும், வருவாயையும் ஆய்வு மேற்கொண்ட பின்பே அரசின் நிதி உதவியை வழங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசின் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கு குறித்த காலத்தில் கற்பித்தல் மற்றும் பராமரிப்பு மானியத்தை வழங்க வேண்டும். அதற்குரிய ஆய்வு பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இதையடுத்து பள்ளிகளுக்கான 4 வகை சான்றிதழ்களை பெற வேண்டும். அரசு அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்த இடங்களில் தான் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்களா, கைத்தொழில் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் நியமனம் மாணவர்களுக்கு உபயோகமாக உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் தொடக்க, நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றிருந்தால் 5 ஆண்டு பணி முன் அனுபவம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் பள்ளிக்காக வழங்கப்பட்ட சொத்துக்களின் வருவாயையும் பராமரிப்பு மானியம் வழங்கும் முன் கணக்கிட வேண்டும். இவற்றையெல்லாம் ஆய்வு மேற்கொண்டு சரியாக இருந்தால் மட்டும் பள்ளிகளுக்கான நிதியுதவியை விடுவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |