Categories
சினிமா தமிழ் சினிமா

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடிவேலு …!!!

தன்னை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடிவேலு.
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள்  வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
Image result for vadivelu
 இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்கினர். சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
Related image
ஆனாலும் கமலின் அரசியல் பணிகள், இந்தியன்-2 பட வேலைகள் போன்றவற்றால் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ‘வெப்’ தொடர்களில் நடிக்க வடிவேலுக்கு அழைப்புகள் வருகின்றன. அதை ஏற்று ‘வெப்’ தொடருக்கு மாற வடிவேல் தயாராகி வருவதாக சில தகவல்கள் வெளியானது.இது பற்றி  நடிகர் வடிவேலு கூறும்போது, நான் வெப் சீரிஸ் எதிலும் நடிக்கவில்லை. ஆனால் படம் தொடர்பான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளிவரும் என்றார்.

Categories

Tech |