Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

26,00,00,000 பேரின் தகவல் திருட்டு… பயனாளர்களே உஷார்… எச்சரிக்கும் ஃபேஸ்புக்..!!

பேஸ்புக் நிறுவனம் 26கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர். இதில் முக்கியமாக ஓன்று பேஸ்புக்.  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சான்றாக கடந்த 10 ஆண்டுகளில் இந்த செயலி உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் பயனர்கள் வீடியோ, புகைப்படம், சாட்டிங்செய்வது என பன்முகத் -தன்மையுடன் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். பேஸ்புக்கில் பரிமாறிக் கொள்ளும் தங்களது தகவல்கள் அவ்வப்போது திருடப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

Image result for Facebook information theft

இந்த வகையில் camparitech  என்ற இணைய தளத்தை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கடந்த 2-ஆம் தேதி, சுமார் 26 கோடி பேஸ்புக் பயனாளர்களின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்ட இணையதள பக்கத்தில் கிடைத்ததை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

Image result for Facebook information theft

மேலும் அவர் கூறுகையில், ஹேக்கர்கள் தீவிரமாக இயங்கும் தளம் ஒன்றிலும் இந்த தகவல்களை எளிதில் டவுன்லோடு செய்யும் வகையில் உள்ளதாக புகார் எழுப்பினார். ஆனால் தற்போது அந்த இணையதள பக்கமே நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதற்கு முன்னதாகவே இந்த தகவல்கள் அனைத்தும் பல பேருக்கு கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Image result for Facebook information theft

அதை தொடர்ந்து, இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக் தகவல்கள் அடிக்கடி திருடப்படுவதாகவும், விளம்பர மற்றும் அரசியல் காரணங்களுக்காக விற்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்படும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு தகவல் திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related image

இதில் பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களே திருடு போனதாக தெரிகின்றது. குறிப்பாக பேஸ்புக் புரொபைல் செட்டிங்கில் பப்ளிக் என வைத்திருப்பவர்கள் தகவல்கள் எளிதில் திருடப்படுவதாக தெரிகிறது. எனவே பேஸ்புக் பயனாளர்கள் கண்டிப்பாக ப்ரொபைல் செட்டிங்கில் நண்பர்களுக்கு மட்டுமே தகவல் தெரியும்படி மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல பேஸ்புக்கில் தவிர பிற தளங்களில் ப்ரோபைலை இணைக்கலாமா என்ற கேள்விக்கு வேண்டாம் என்ற பதிலையே கொடுக்க வேண்டும்.

Related image

சந்தேகமாக இருக்கும் வகையில் வரும் தகவல்களை தயவு செய்து பார்க்க வேண்டும்  என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பேஸ்புக் பயனாளர்கள் அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |