குடும்பத்தகராறில் ஆத்திரமடைந்து இரும்பு கம்பியால் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆவத்தி பாளையத்தில் சிவராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். பேன்சி கடை நடத்தி வரும் இவருக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று நடந்த தகராறில் ஆத்திரமடைந்த சிவராமகிருஷ்ணன் சத்யாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளிபாளையம் காவல்துறையினர் சிவராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.