ஹீரோ ,தம்பி ஆகிய இருபடங்களும் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் மிகுந்த வருத்தமடைந்துள்ளார்.
நடிகர் கார்த்தி ,ஜோதிகா ,சத்யராஜ் ,சவுகார் ஜானகி ,உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம்” தம்பி”.இந்த படம் நேற்று வெளியானது .இதே போன்று சிவகார்த்திகேயன் ,அர்ஜுன் ,கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்ட பலர் நடித்த “ஹீரோ” படமும் நேற்று முன்தினம் வெளியானது .
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கும் நிலையில் ,அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறையும் விடப்படுவதால் இந்தசமயத்தில் இருபடமும் வெளியிடப்பட்டது .இதனால் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர் .ஆனால் இப்படம் இணையதளத்தில் வெளியாகியதால் (tamilrockers) படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.