ஓவிய ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள காவாங்கரை மாநகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மணிகண்டனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து குடும்பம் நடத்த வருமாறு மணிகண்டன் தனது மனைவியை அடிக்கடி அழைத்துள்ளார்.
ஆனாலும் மணிகண்டனின் மனைவி குடும்பம் நடத்த மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.