Categories
தேசிய செய்திகள்

மாட்டுப் பொங்கல் பண்டிகை…. ஆளுநர் தமிழிசையை மாடு முட்ட வந்ததால் பெரும் பரபரப்பு…. வைரல்….!!!!

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இதை பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும், பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் ராஜ்பவனில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றுள்ளார். அப்போது கோசாலையில் இருந்த மாடு ஒன்றுக்கு தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து பழம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். இந்த நிகழ்வானது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுபற்றிய வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் மேலே கூறியது போன்று, பூஜை முடிந்தபின்னர், மாட்டுக்கு மாலை அணிவித்து பழம் கொடுக்க முயற்சி செய்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

முதலில் மாட்டுக்கு பொட்டு வைக்கிறார். பின்னர் அவர் மாலை அணிவிக்க முயற்சி செய்யும்போது, தலையை குனிந்தவாறு இருக்கும் மாடு, ஆளுநர் தமிழிசை மாலை அணிந்தவுடன் திடீரென தலையை மேலே தூக்கி அவரை நோக்கி முட்டச் சென்றுள்ளது. உடனடியாக தள்ளிச் சென்ற அவர், அருகில் இருந்தவர்களிடம் மாலையைக் கொடுத்து மாட்டுக்கு அணிவிக்குமாறு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மாலை அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.

Categories

Tech |