Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க வாயை அடைக்கணுமா? ஏமாளி ஆகிருவீங்க பார்த்துக்கோங்க… திமுகவுக்கு அசால்ட் கொடுக்கும் அதிமுக …!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, ஊழல் என்று வருகின்ற பொழுது, இந்த ஊழலை மையப்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கோ, பேசுவதற்கோ,  எந்தவிதமான தார்மீக உரிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கோ, அரசுக்கோ  கிடையாது. திமுக தலைவர்களுக்கும் கிடையாது. ஏனென்று சொன்னால்,

ஊழலுக்கு தமிழகத்தில் வித்திட்டவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் தான், அவருடைய குடும்பம். ஆட்சியில்  இருக்கின்றபொழுதே…. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கின்ற பொழுதே அவர்களின் குடும்பத்தில் சென்று மைய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதை எல்லாம் மறந்துவிட்டு மக்களை திசை திருப்புவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், இதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக, வன்மையாக கண்டிக்கிறது. எந்த வழக்கை எப்படி சூழ்நிலையில் போட்டாலும் அதை எதிர்கொண்டு நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லோரையும் ஏதாவது ஒரு வகையில் சிறுமைப்படுத்த வேண்டும்,  அவமானப்படுத்த வேண்டும், மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கம். அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்று சோதனைகளை நடத்தி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வாய் அடைப்பது என்ற நினைவினால்,

அவர்களை  போல  ஒரு ஏமாளிகள் எவரும் இருக்க முடியாது. தங்களுடைய தோல்விகளை மறைப்பதற்காக…  ஏற்கனவே கொரோனா தொற்று வேகமாக பரவி கொண்டிருக்கிறது… அமைச்சர்கள் அவர்களே கூறியிருக்கிறார்கள் அதுவும் ஜெட் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |