நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்துகொள்ள தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கு காதல் மலர்ந்தது. அதன்பிறகு இருவரும் பண்டிகை நாட்களில் ஒன்றாக வெளிநாட்டிற்கு பறப்பது, பொது இடங்களுக்கு செல்வது என்று தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர்.
சுமார் 6 ஆண்டுகளைத் தாண்டி காதலித்துக் கொண்டிருக்கும் இவர்கள், எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் நடிகர் தனுஷ் அவரின் மனைவியை விவாகரத்து செய்தார். இது திரையுலக பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர் மட்டுமல்லாமல், மேலும் பல நட்சத்திர தம்பதிகளும் சமீப காலங்களில் விவாகரத்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் நயன்தாரா திருமணம் செய்துகொள்ள தயங்குவதாக கூறப்படுகிறது. எனவே, சிறிது காலம் கழித்து திருமணம் செய்யலாம் என்று இருவரும் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.