பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள “டஹிட்டி” என்ற தீவு பகுதியில் ஆய்வாளர்கள் பிரம்மாண்டமான பவளப்பாறைகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த பவளப்பாறைகள் ‘ட்விலைட் ஸோன்’ என்ற கடல் பகுதியில் சுமார் 3 மீட்டர் நீளத்திற்கு வளர்ந்துள்ளது. மேலும் 70 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த பவளப்பாறைகள் குறித்து ஆய்வாளர்கள் வித்தியாசமான தகவல் ஒன்றையும் கூறி இருக்கின்றனர்.
அதாவது இன்னும் 25 ஆண்டுகளில் அந்த பவளப்பாறைகள் முழுமையாக உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பவளப்பாறைகள் கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் அமைந்திருப்பதால் புவி வெப்பமடைதலால் அவ்வளவு எளிதில் பாதிக்கப்படாது என்றும் கூறுகின்றனர்.