Categories
தேசிய செய்திகள்

போலி மருந்துகளை தடுக்கும் முயற்சி…. மருந்து பொருட்களில் இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மருந்து தயாரிப்புப் பொருட்களின் தொகுப்புகளில் QR குறியீடுகளை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் வழிகாட்டுதலின் பேரில் போலி மருந்துகளைத் தடுக்கின்ற முயற்சியில் உள்நாட்டில் தயார் செய்யப்படும் (அ) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து தயாரிப்புப் பொருட்களின் தொகுப்புகளின் மட்டத்தில் விரைவான மறுமொழிக் குறியீட்டை கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. அந்த அடிப்படையில் குறியீட்டில் சேமிக்கப்படவுள்ள தரவுகளான API இன் பெயர், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, உற்பத்தி தேதி, காலாவதி தேதி, பிரிவு எண்-அளவு, உற்பத்தி உரிமம், இறக்குமதி உரிம எண் உள்ளிட்டவைகளை கொண்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |