Categories
உலக செய்திகள்

“தேசிய அரவணைப்பு தினம்”…. நெருக்கமாக உறங்கிய குட்டிகள்…. வெளியான நெகிழ்ச்சி வீடியோ….!!

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டு வரும் தேசிய அரவணைப்பு தினத்தை முன்னிட்டு 2 ஆண் யானை குட்டிகள் ஒன்றோடொன்று நெருக்கமாக தூங்கும் காட்சிகள் தொடர்புடைய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் அசோகா, கவி என்ற 2 ஆண் யானை குட்டிகள் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த 2 ஆண் யானை குட்டிகளும் ஒன்றோடொன்று நெருக்கமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளது. இதனை பூங்காவின் உரிமையாளர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளார்கள்.

இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் தேசிய அரவணைப்பு தினத்தை முன்னிட்டு இந்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |