Categories
அரசியல்

இந்த தடவ நம்ம ஆட்சி தா….! வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி செயல்படுத்தி வருகின்றது. மேலும் பெண்களை முக்கியமாக வைத்து தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா ஏற்கனவே வெளியீட்டு வந்திருந்தார் இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான தேர்தல் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக ஸ்டார்ட்அப் நிதியாக ஐயாயிரம் கோடி ஒதுக்கப்படும். காவல் துறையில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆரம்ப பள்ளிகளில் 1.5 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதனால் பல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றது.

Categories

Tech |