குடியரசுதின வாகன அணிவகுப்பில் தமிழகம் நிராகரிக்கப்பட்டது குறித்து பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,
2006 லிருந்து 2014 வரை திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். அந்த பத்து ஆண்டுகளில் 2009 மற்றும் 2014 மட்டும்தான் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி போச்சு.மீதி ஆண்டுகள் ஏன் போகவில்லை. அதற்கு என்ன காரணம் ? அதே தான் இப்போதும் காரணம். பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு 2017 மற்றும் 2018 பிஜேபி ஆளுகின்ற உத்தரப்பிரதேசத்துக்கு இடமில்லை. ஆகவே இதற்கும் அரசாங்கத்துக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அதற்காக போட்டுள்ள மூணு மெம்பர் கமிட்டிகள் இருக்கு.
இப்போ ஓட்டப்பந்தயம் போறோம். 5பேர் வர வேண்டும் என்றால், அதற்குள் வராமல் இதுவே பாரபட்சம் என சொல்லி நாடகம் நடத்துகின்றார்கள். இந்த நாடகம் எதற்குஎன்றால்… பொங்கல் தொகுப்பு கொள்ளையை மக்களை திசை திருப்புவதற்காக திராவிட முன்னேற்ற கழகம் நடத்திய நாடகம். ஏனென்றால் 2006லிருந்து 7 வருடம் அணிவகுப்பு ஊர்தி இல்லையா ஏன் வைகோ மற்றும் திருமாவளவனை தூண்டிவிட்டு கத்தவிட சொல்ல வேண்டியதான…
ஏன் பண்ண வில்லை? அப்பொழுது ஏன் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக கடிதம் எழுதவில்லை. கருணாநிதி ஏன் சும்மா இருந்தார் ? கருணாநிதியைவிட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் உணர்வு அதிகரித்துவிட்டதா ? அனைத்தும் இவர்கள் நடத்திய நாடகம். பிரிவினைவாதிகள், வெறுப்பு அரசியல் இவர்களின் அடிப்படை சித்தாந்தம். மொழி வெறுப்பு, மத வெறுப்பு, சாதி வெறுப்பு, இனவெறுப்பு இவை நான்கும் தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் அடித்தளமாகும் என விமர்சனம் செய்தார்.