ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி கட்டிடத்தில் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குணா தயாகர். இவருக்கு 45 வயது ஆகிறது. கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நேற்று காலை வழக்கபோல் பரிசோதனை செய்வதற்கு டாக்டர் வந்து பார்கும் போது தனது அறையில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தது. அதன் அடிப்படியில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.