சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக மத போதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் மத போதகரான ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்டீபன் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.