கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் தமிழக விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, சங்க மாவட்ட தலைவர் முத்தையா, விவசாய சங்க மாவட்ட செயலாளர் அம்மையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு அனைவரும் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தார் சுப்பிரமணியனிடம் மனு அளித்துள்ளனர்.