தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்துக்கள் இரு மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் கடந்த 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. கடந்த 1956 ஆம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது. அதன்பிறகு கழக 2015ஆம் ஆண்டை இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 6-ல் திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் என்பவர் தொடர்ந்த வழக்கில், 1956 ஆம் ஆண்டு தான் வாரிசு உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பே குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும்தான் சொத்து செல்லுமா அல்லது மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1956 ஆம் ஆண்டு வாரிசுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு முன்பாக இறப்பு ஏற்பட்டு இருந்தாலும் தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு பெண்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.