சர்வதேச தொழிலாளர் அமைப்பு கொரோனா காரணமாக இந்த வருடத்தில் உலகம் முழுக்க வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 20.7 கோடியாக உயரும் என்று கூறியிருக்கிறது.
கொரோனா பரவத்தொடங்கியதிலிருந்து உலக நாடுகளில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் தங்களின் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் வருடங்களில் உலகம் முழுக்க வேலைவாய்ப்பின்மை முன்பு இருந்ததை விட வெகுவாக அதிகரிக்கும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியிருக்கிறது.
இந்த வருடத்தில் மட்டும் சுமார் 20.7 கோடி மக்கள் தங்கள் பணியை இழக்கவிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறது. இந்த எண்ணிக்கை கடந்த 2019ஆம் வருடத்தைவிட சுமார் 2.1 கோடி அதிகம் என்று கூறப்பட்டிருக்கிறது. தாற்காலிககமாக வழங்கப்படும் பணி வாய்ப்புகள் நிரந்தர தீர்வை கொடுக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.