Categories
அரசியல்

தமிழகம் முழுக்க செல்லும் அலங்கார ஊர்தி…. எங்களுக்கு சந்தோஷம் தா…. அண்ணாமலை வரவேற்பு….!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தினத்தன்று மாநிலம் முழுக்க செல்லும் என்பதை வரவேற்றிருக்கிறார். 

டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவிற்கான அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டது. இந்த ஊர்தியில், வ.உ.சி., வேலு நாச்சியார், பாரதியார் மற்றும் மருது சகோதரர்கள் போன்ற விடுதலை போராட்ட வீரர்களின் படங்கள் இருந்தது. ஆனால் தேர்வு குழு, அந்த ஊர்தியை நிராகரித்தது.

இதனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் எதிர்த்தனர். அதன்பிறகு, மத்திய அரசு தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கத்தை கொடுத்தது. இதனையடுத்து, அந்த ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் எனவும், மாநிலம் முழுக்க கொண்டு செல்லப்படும் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்தார்.

இதனை பா.ஜ.க வரவேற்றிருக்கிறது. இது குறித்து தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில், குடியரசு தினத்தன்று அலங்கார ஊர்தி மாநிலம் முழுக்க செல்லும் என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |