தலிபான்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது தலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கைப்பாவையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செயல்பட்டு வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் தேசிய உணர்வுள்ள ஆப்கானியர்களை பாகிஸ்தான் அரசாங்கம் இஸ்லாமிய எமிரேட்ஸுக்கு எதிராக தூண்டி விட முயற்சி செய்கிறது. இது அவர்களுடைய சதிகளில் ஒன்று ஆகும். ஏற்கனவே பாகிஸ்தான் FATF அமைப்பினால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அழிந்து விடும் என்று அவர் கூறியுள்ளார்.