Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண ”பிக்பாஸ்” போட்டியாளர்….. எந்த படம்னு தெரியுமா…..?

‘ நண்பன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை ராஜூ மிஸ் பண்ணியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. போட்டியாளர் ராஜூ இந்த சீசனின் வெற்றியாளர் ஆகியுள்ளார்.

நண்பன் படத்தில் நடித்த மில்லிமீட்டரா இது..! தாடி மீசையெல்லாம் வச்சுக்கிட்டு  பார்க்கவே பயங்கரமாக இருக்காரே..! - tamil360newz

இதனையடுத்து, பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு இவருக்கு மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் நடிக்கும் படங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய்யின் தீவிர ரசிகரான இவர் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு அவரை சந்திப்பேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் விஜய்யின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் நடிப்பில் வெளியான ”நண்பன்” திரைப்படத்தில் இவர் மில்லிமீட்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் சில காரணங்களால் இவர் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

Categories

Tech |