Categories
அரசியல்

“வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு ஆதரவு கொடுக்குறீங்க….! இது நல்லது இல்ல”…. மோடியை சாடிய முன்னாள் நீதிபதி…!!!

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன், பாஜக தலைவர்கள் நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். அதாவது நீதிபதி ரோகிண்டன் ஆளும் கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் வெறுப்பு பேச்சுகளை கண்டு மௌனமாக இருப்பதோடு அதனை ஆதரித்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்து இந்துத்துவா மேலாதிக்கவாதிகள், கிறிஸ்துவர்களை தாக்கினர். மேலும் முஸ்லிம் பெண்கள் குறித்து ஆன்லைன் தளங்களில் மோசமான கருத்துக்களை வெளியிட்டனர். இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும் குற்றவாளிகளுக்கு எதிராக குரல் கொடுத்ததால் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் மராட்டிய ஆட்சியாளர் சிவாஜியும், முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பையும் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார். அதேபோல் பாராளுமன்ற சட்டங்களில் வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்.

Categories

Tech |