Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி முதல் சம்பளம் உயர்வு…. மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய குழுவின் பரிந்துரையின் கீழ் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து செயல்பாடுகளும் அரசு ஊழியர்களின் பணியை பொறுத்து உள்ளது. அதனால் அனைத்து அரசுகளும் தங்களின் ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய சலுகைகளை விரைந்து வழங்க தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா காரணமாக ஊழியர்களுக்கு பணப்பலன்கள் அதிகரித்து வழங்காமல் நிலுவையில் இருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் படிகளை உயர்த்தி வழங்கி அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

அதன்படி ஆந்திர மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு 11 வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களை அமல்படுத்த இருப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களின் படி ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்கான அனைத்து நடைமுறை வழிமுறைகளையும் நிதித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள்படி சம்பளம் பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படும் என்று அரசின் சிறப்பு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நிலுவையில் உள்ள ஐந்து அகவிலைப்படி தவணைகளையும் பிப்ரவரியில் செலுத்துவதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |