Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏலமன்னாவில் இருக்கும் சாலையோரத்தில் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் வனப் பகுதியில் இருக்கும் காய்ந்து போன புற்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அப்பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ அனைத்து இடங்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டுத்தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

Categories

Tech |