அமெரிக்காவில் காணாமல் போன தனது செல்ல நாயை கண்டுபிடிக்க பெண் ஒருவர் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். மேலும், தனது நாயை கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் அந்த நாயுடன் ஒரு மார்க்கெட் சென்றார். அப்போது அந்த நாய் திடீரென காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 5 வருடங்களாக செல்லமாக வளர்த்த நாயை காணாததால் எமிலி மிக மனவருத்தம் அடைந்தார்.
எமிலி தனது நண்பர்களுடன் பல இடங்களில் தேடினார். தனது செல்ல நாயின் போட்டோவை விமான பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோரிடம் கொடுத்து விசாரித்தார். இருந்தும் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதை தொடர்ந்து அவர் ஒரு விமானத்தை ரூ.85 ஆயிரத்துக்கு வாடகைக்கு தேடியுள்ளார். இருந்தும் நாய் கிடைக்கவில்லை. எனவே தனது நாயின் போட்டோவுடன் கூடிய பேனரை விமானத்தில் கட்டி பறக்கவிட்டபடி ஆன்லைனில் விளம்பரம் செய்தார்.
மேலும், தனது ஜாக்சனை கண்டு பிடித்து தருபவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பிற்கு சுமார் ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் நாயை கண்டு பிடிக்க பண உதவி செய்யும்படி இணைய தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.