நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றோடு நாட்டில் 3அலை அனைத்து மாநிலங்களிலும் வேகம் எடுத்து வருவதால் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தின பாதிப்பை விட 9,550 எண்ணிக்கையில் அதிகமாகும். புதிதாக 488பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,42,676பேர் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளனர்.
தற்போது 21,13,365 பேர் சிகிச்சையில் இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை , ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை 10,050ஆக உயர்ந்து நேற்றை விட 3.69% பாதிப்பு விகிதம் உயர்ந்துள்ளது. அதே போல கொரோனா பாசிட்டிவ் விகிதம் 17.22%ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
India reports 3,37,704 new COVID cases (9,550 less than yesterday), 488 deaths, and 2,42,676 recoveries in the last 24 hours
Active case: 21,13,365
Daily positivity rate: 17.22%10,050 total Omicron cases detected so far; an increase of 3.69% since yesterday pic.twitter.com/sZburym82e
— ANI (@ANI) January 22, 2022