இந்தியாவை சேர்ந்த ‘Nexzu Mobility’ என்ற நிறுவனம் லித்தியம் பேட்டரியில் இயங்கும் புதிய மின்சார மிதிவண்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மிதிவண்டிகளில் 100 கி.மீட்டர் தூரம் வரை செல்ல ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தாலே போதும் என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் பாசிங்கா கார்கோ மாடல் வண்டி 51 ஆயிரத்து 575 ரூபாயும், பாசிங்கா மாடல் மிதிவண்டிக்கு 49 ஆயிரத்து 445 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிறுவனம் கடந்த 2015-ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் Avan motors என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தற்போது Nexzu என்ற பெயரில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.