Categories
உலக செய்திகள்

BIG ALERT: இதோ.. வந்தாச்சு “ஓமிக்ரானின் புதிய திரிபு”…. தலைதூக்குமா பாதிப்பு…? வெளியான பரபரப்பு அறிக்கை….!!

இங்கிலாந்தில் கடந்த 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரானின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் இங்கிலாந்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 10ஆம் தேதி ஓமிக்ரானின் புதிய மாறுபாடான பிஏ2 கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, புதிய திரிபு விசாரணையின் கீழ் இருக்கும் மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய திரிபால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது மிக குறைவாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நோய்தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் இதுபோன்ற புதிய திரிபுகள் உருவாவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்று இங்கிலாந்து நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் மீரா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |