பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னின்று நடத்திய பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பல பரிசு பொருட்களையும் வழங்கினார். ஆனால் நேற்று முதல்வர் ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் நலத்திட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது அச்சத்தில் இருப்பதாக மதுரை திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.