Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு இழப்பீடு…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 20-ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மீனவர்களது அனைத்து கோரிக்கைகளின் மீதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மீனவர்களது கோரிக்கைகள் தொடர்பான கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டார்:

இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 5.66 கோடி ரூபாய் வழங்கப்படும். கடந்த வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இழப்பீடாக 5.66 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் வலியுறுத்தினார்கள்.
கைது செய்யப்பட்ட மீனவர்களில் மீதமுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும், இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், எம்.பி.க்கள் மூலம் வலியுறுத்தியதையும் மீனவ சங்க பிரதிநிதிகள் மாண்புமிகு முதலமைச்சர் விளக்கிக் கூறினார்கள்.

மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் திருமதி கனிமொழி எம்.பி. அவர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களிடம் நேரம் பெற்று மாண்புமிகு தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருடன் மீனவ பிரதிநிதிகளையும் அழைத்து சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலையை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்படி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.

இந்நிகழ்வில் மாண்புமிகு மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கௌதமன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு காதர்பாட்ஷா, முத்துராமலிங்கம் கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ஜவஹர், இ.ஆ.ப. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர், டாக்டர் பழனிசாமி, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Categories

Tech |