Categories
சினிமா தமிழ் சினிமா

“எந்த நடிகரும் இப்படி சொன்னதில்லை!”…. அஜித், கவுண்டமணியிடம் இருக்கும் தனி சிறப்பு….!!!!

பிரபல நடிகரான அஜித்குமார் இயல்பாகவே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் படைத்தவர். மேலும் ஆரம்ப காலத்தில் இவருக்கு முன்கோபம் அதிகமாக இருந்துள்ளது. அதனை அவரே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். அதேபோல் அஜித்குமார் எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் அவரவர் வாழ்க்கையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று கூறினார். அதன் பிறகே ரசிகர் மன்றங்கள் இல்லாமல் அஜித்தின் படங்கள் வெளிவர ஆரம்பித்தது.

மேலும் பிரபலமாக இருந்த போது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாங்கிய பிரபல நடிகரான கவுண்டமணிக்கு ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைக்க முன்வந்தனர். ஆனால் தனக்கு அதில் விருப்பம் இல்லை என்று கவுண்டமணி கூறிவிட்டார். இதுவரை திரையுலகில் அஜித்குமார் மற்றும் கவுண்டமணி இருவர் மட்டுமே தங்களுக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர்.

அதேபோல் இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சி விழாவிற்கும் செல்லமாட்டார்கள். ஏன் ரசிகர்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருவரும் விழா நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை. அதோடு மட்டுமில்லாமல் இருவரும் தங்களது நிஜவாழ்க்கையில் எப்படி இருக்கிறார்களோ அப்படி தான் அவர்கள் சினிமாவிலும் இருக்கின்றனர்.

Categories

Tech |