பிரிட்டன் இளவரசர் வில்லியம் தாயை இழந்த 11 வயது சிறுவனிடம், எனக்கும் அந்த வலி தெரியும் என்று ஆறுதல் கூறும் வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டன் இளவரசி டயானா வாகன விபத்தில் மரணமடைந்தார். அப்போது இளவரசர் வில்லியம் 14 வயது சிறுவனாக இருந்தார். அந்த கால கட்டங்களில், டயானா கணவரை பிரிந்து விட்டு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக பல செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எனவே, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
தாய் மற்றும் தந்தை இருவரைப் பற்றியும் தினந்தோறும் செய்தி வெளியாகிக் கொண்டிருந்ததை அறிந்த இருவரும் மனம் நொந்து போனார்கள். அந்த சமயத்தில், அவரின் தாய் டயானாவும் மரணமடைந்தது அவர்களை மனமுடைய செய்தது. தாய் இறந்து 25 வருடங்கள் கடந்த பின்பும் அந்த வலி தற்போதும் தன்னிடம் இருக்கிறது என்பதை இளவரசர் வில்லியம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
Lancashire என்ற பகுதியில் இருக்கும் வறுமை, போதைப்பொருளுக்கு அடிமை மற்றும் வீடற்ற நிலை போன்ற காரணங்களால் தனித்து விடப்பட்டவர்களின் இல்லம் ஒன்றிற்கு இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேட் இருவரும் சென்றிருக்கிறார்கள். அங்கு 11 வயதுடைய சிறுவனின் தாய் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் உயிரிழந்திருக்கிறார்.
இளவரசர் வில்லியம், அந்த சிறுவனிடம் சென்று, “எனக்கு 14 வயது ஆகும் போது என் தாய் இறந்துவிட்டார். அந்த வலி எனக்கு தெரியும். அது காலப்போக்கில் மறைந்து விடும் என்று கனத்த மனதுடன் ஆறுதல் கூறியிருக்கிறார்.