கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று மனச்சுமை குறையும் நாளாக இருக்கும். மங்கள நிகழ்வு குடும்பத்தில் நடைபெறக் கூடிய வாய்ப்பு கைகூடும். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இன்று எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும்.
பண வரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினரும் இன்று அன்பு பாராட்டக் கூடும். இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உடல் ஓய்வாகவே இன்று காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான், வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.