நடைபாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார்கள் தெரிவித்து, நகராட்சி அதிகாரிகள் பெயரளவுக்கு மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாக்குவதும் தொடர் கதையாகவே நடந்து வருகின்றது.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் குத்தகை அடிப்படையில் வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் கடைகளின் முன்பாக நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் கடையின் விளம்பர பலகைகள் ஆகியவற்றை நகராட்சி ஆணையர் தலைமையில், காவல்துறை சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் மற்றும் தாசில்தார் பழனிராஜன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் அகற்றியுள்ளனர்.