Categories
அரசியல்

மாணவி தற்கொலை : “வீடியோ ஆதாரம் இருக்கு!”…. நீங்க எப்படி முடிவு பண்ணுவீங்க?…. அண்ணாமலை ஆவேசம்….!!!!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற மாணவி தஞ்சையில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த லாவண்யா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் லாவண்யா, தன்னை மதம் மாற வற்புறுத்தி நெருக்கடிக்கு ஆளாக்கியதாக கூறிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மதம் மாற்றம் தொடர்பான பிரச்சினை எதுவும் நடைபெறவில்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா கூறியுள்ளார்.

இதனால் கொந்தளித்த அண்ணாமலை, மாணவி அளித்த வீடியோ வாக்குமூலம் தெளிவாக உள்ளது. அப்படி இருக்கும் போது போலீஸ் சூப்பிரண்டு மதம் மாற்றம் தொடர்பான பிரச்சினை எதுவும் நடைபெறவில்லை என்ற முடிவுக்கு எப்படி வந்தார் ? அல்லது வீடியோ ஆதாரம் பொய் என்ற முடிவுக்கு வந்தாரா ? எவ்வாறு அதை உறுதிப்படுத்தினார் ? என்று கேட்டு போலீஸ் சூப்பிரண்டை அண்ணாமலை தாறுமாறாக சாடியுள்ளார்.

Categories

Tech |