Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பொது போக்குவரத்துக்கு இது கட்டாயம்…. அமைச்சர் முக்கிய தகவல்…..!!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் தினசரி இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கொரோனா தொற்று அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டாலும், லேசான அறிகுறியுடன் மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் கொரோனா 2-வது அலையைவிட மிகவும் குறைவாகவே இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்ட தகவலில், பொது போக்குவரத்து பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். மேலும் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் ஆகும். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தகவல் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |