குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தின் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதிலும் வருகின்ற 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில்உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறவுள்ளது. அப்போது மாட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். இதனையடுத்து குடியரசு தினத்தன்று மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.
எனவே குடியரசு விழாவை முன்னிட்டு நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றுள்ளது. அப்போது மாவட்ட ஆயுதப் படையை சேர்ந்த 90 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஆட்சியர் வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது