பாகிஸ்தானில் கொரோனாவின் ஐந்தாம் அலை பரவி வரும் நிலையில் இஸ்லாமாபாத்தில் இருக்கும் விமான நிலையத்தில் 100 பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமாபாத்தின் விமான நிலையத்தில் இருக்கும் இயக்குனர், உதவி மற்றும் இணை இயக்குனர்கள், ஏடிசி கட்டுப்பாட்டு அதிகாரிகள் போன்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், 100 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், விமான நிலையத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளாததால் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உண்டாகும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.