மியான்மர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகி கட்சியில் உள்ள முன்னாள் எம்.பி ஷெயார்தாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாத தடுப்புச் சட்ட அடிப்படையில் ஷெயார்தாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இருக்கும் இவர் தீவிரவாத குற்றங்களை செய்ததாக கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் கைதானார். மேலும் இவர் நடத்திய இசைக்குழுவில், ராணுவ ஆட்சியை எதிர்த்து பல பாடல்களை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
மியான்மர் நாட்டில் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சி கைப்பற்றிவிட்டது. அதன்பிறகு, தலைவர் ஆங் சான் சூகி உட்பட சில முக்கிய தலைவர்களை சிறை வைத்தது. ஆங் சான் சூகி மீது வழக்குப்பதிவு செய்து 4 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.