Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எருது விடும் விழா…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 150 காளைகள் பங்கேற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்தகோட்டை கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு ஊர் கவுண்டர் பூபாலன், நாட்டாமை எம்.சங்கர், தர்மகர்த்தா பாலகிருஷ்ணன் மற்றும் பழனி ஆகியோர் தலைமை வகித்துள்ளனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் சத்தியவாணிபழனி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் காயத்ரி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ-க்கள் தேவராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளனர்.

அதன்பின் பல பகுதிகளில் இருந்து 150 காளைகள் பங்கேற்று குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் முதல் பரிசாக முருகன் என்பவருக்கு 60 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கிராம் தங்க நாணயமும், சக்திவேல் என்பவருக்கு இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 கிராம் தங்க நாணயமும் மற்றும் யோகலட்சுமி என்பவருக்கு மூன்றாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 கிராம் தங்க நாணயமும் என மொத்தமாக 30 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தலைமையிலான வருவாய்த்துறையினர், துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 100 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காளைகள் முட்டி 30 நபர்கள் காயமடைந்ததால் அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |