காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிப்பானங்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயப்பாட்டு வரும் உணவகங்களில் காலாவதியான உணவுகள், குளிர்பானங்கள், அதிக சாயம் பூசப்பட்ட உணவு பொருட்கள், பண்டங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களான மணிமாறன், சரண்யா, ஜனகர் ஜோதிநாதன், மதன்குமார், சக்தீஸ்வரன் ஆகியோர் கம்பம், வேலப்பர் கோவில் தெரு போன்ற பகுதிகளுக்கு சென்று உணவகம் மற்றும் கடைகளில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பான பொருட்கள், சிப்ஸ், பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் குடல் அப்பளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கேயே தீவைத்து அழித்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.