Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு நிம்மதி செய்தி…. கொரோனா 3-வது அலை…. சுகாதாரத் துறை செயலாளர் சொன்னது என்ன?….!!!!

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்டி படைத்தது வருகிறது. 2020ஆம் ஆண்டு முதல் அலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் லட்சகணக்கானோர் உயிரிழந்தனர். இதனிடையில் முதல் அலையில் இந்தியாவில் அவ்வளவாக பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து கொரோனா 2-ம் அலை வந்தபோது இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பலியாகினர். அதன் பாதிப்பில் இருந்து நாடு படிப்படியாக வெளிவந்துள்ள நிலையில் தற்போது 3-வது அலை பரவி உச்சத்தை அடைந்துள்ளது.

இதனால் 2-வது அலையை போன்றே தற்போதும் கொரோனாவால் உயிர்பலி ஏற்படுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆகவே மக்களின் இந்த பயத்தை போக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ஆறுதல் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது “கொரோனா 2-வது அலையை ஒப்பிடும்போது தற்போது பரவி வரும் மூன்றாவது அலையில கொரோனாவின் பாதிப்பு குறைவுதான். கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் தினசரி எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும், குணமடைவோர் எண்ணி்க்கையும் அதிகமாக இருக்கிறது. அதே சமயம் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது.

நாட்டு மக்களில் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம்” என்று சுகாதார துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அரசு உயரதிகாரியின் இந்த ஆறுதல் தகவலால் கொரோனா உயிர் அச்சத்தில் இருக்கும் நாட்டு மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Categories

Tech |